UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM
ADDED : ஜூலை 14, 2023 08:37 AM
ராமநாதபுரம்:
ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டகலெக்டர் அலுவலக வளாகங்களிலும் மகளிர் குழுவினர் மூலம் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைக்கப்பட உள்ளது.தற்போது 2023-24 சிறு தானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம் சார்பில்பொது மக்கள் மத்தியில் சிறுதானிய உணவு பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தஅரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மகளிர் சுய உதவி குழுக்கள்மூலம் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகங்களில், சிறுதானிய சிற்றுண்டி உணவகம் அமைக்கப்படஉள்ளது.விருப்பமுள்ள குழுவினர் சிறுதானிய உற்பத்தி, மதிப்புகூட்டிய பொருட்கள் தயாரிப்பில் முன் அனுபவம் பெற்று, உணவுகட்டுப்பாட்டு துறையில் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்று பெற்றிருக்க வேண்டும். மின்னணு மூலம் பணபரிவர்த்தனை செய்ய கியூஆர் கோடு பெற்றிருக்க வேண்டும். தகுதியான மகளிர் சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான குழுகூட்டமைப்புகள், உற்பத்தியாளர் குழுக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட திட்ட இயக்குனர்,மகளிர் திட்ட அலுவலகத்தில் நாளை (ஜூலை 15க்குள்) நேரடியாக விண்ணப்பிக்கலாம், என மகளிர் திட்ட அதிகாரிகள் கூறினர்.
