தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ மாணவர் சேர்க்கை: சி.பி.ஐ., விசாரிக்க அ.தி.மு.க., கோரிக்கை

மருத்துவ மாணவர் சேர்க்கை: சி.பி.ஐ., விசாரிக்க அ.தி.மு.க., கோரிக்கை

மருத்துவ மாணவர் சேர்க்கை: சி.பி.ஐ., விசாரிக்க அ.தி.மு.க., கோரிக்கை


UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM

ADDED : ஜூலை 14, 2023 08:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM ADDED : ஜூலை 14, 2023 08:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மருத்துவ மாணவர் சேர்க்கையில் விஞ்ஞான ரீதியில் நடைபெறும் ஊழலை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என அ.தி.மு.க., துணை செயலர் வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம்:
புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்கள் உள்ளன. இந்தியாவில் புதுச்சேரியில்தான் பிராந்திய இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. மருத்துவ கல்வியில் பிராந்திய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு (காரைக்கால் 18 சதவீதம், ஏனாம் 4 சதவீதம், மாகி 3 சதவீதம்) அளிக்கப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டின் மூலம் பிராந்திய மாணவர்கள் பயனடைவதற்கு பதிலாக ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இணைந்து மருத்துவக் கல்லுாரி இடங்களை விற்று சுயலாபம் அடைகின்றனர்.போலி சான்றிதழ்கள் மூலம் அண்டை மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் இரட்டை குடியுரிமை பெற்றவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லுாரி இடங்கள் பல கோடிக்கு விற்கப்படுகின்றன. விஞ்ஞான ரீதியில் இரட்டை குடியுரிமைக்கு போலி சான்றிதழ் வழங்கி மருத்துவக்கல்லுாரி மாணவர் சேர்க்கையில் மிகப்பெரும் ஊழலும், முறைகேடும் நடந்து வருகிறது. இதனை சி.பி.ஐ., விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நேர்மையாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us