தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செமஸ்டர் தேர்வு தாமதம் பட்டதாரிகள் தவிப்பு

செமஸ்டர் தேர்வு தாமதம் பட்டதாரிகள் தவிப்பு

செமஸ்டர் தேர்வு தாமதம் பட்டதாரிகள் தவிப்பு


UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM

ADDED : ஜூலை 14, 2023 08:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM ADDED : ஜூலை 14, 2023 08:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 
தமிழகத்தில், பல்வேறு கல்லுாரிகள், பல்கலைகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் தாமதமாவதால், பட்டதாரிகள் அடுத்த கட்ட பணிகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு, ஜூன் மாதத்துக்குள் இறுதி ஆண்டு தேர்வு முடித்து, முடிவுகளும் வெளியிடப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவல் பிரச்னைக்கு பின், இந்த கால அளவில் மாற்றம் ஏற்பட்டது. பல கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் இன்னும், தாமதமாகவே தேர்வு நடத்துவது, தேர்வு முடிவு வெளியிடு வது தொடர்கிறது. ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ் இயங்கும், தன்னாட்சியல்லாத பி.எட்., கல்லுாரிகளில், கடந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தவில்லை.தமிழக திறந்தநிலை பல்கலை, பாரதிதாசன் பல்கலை உள்ளிட்ட பல பல்கலைகளில், தொலைநிலையில் இளநிலை, முதுநிலை படிப்பு தேர்வுகளையும் முடிக்க தாமதமாகியுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், அடுத்த கட்ட படிப்புகள் அல்லது டி.என்.பி.எஸ்.சி., ஆசிரியர் தேர்வு வாரியம், மத்திய தேர்வாணைய போட்டி தேர்வுகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் விரைந்து தேர்வை நடத்தி முடித்து, முடிவை வெளியிட வேண்டும் என பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us