மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு
UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM
ADDED : ஜூலை 14, 2023 09:28 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.மருத்துவ கல்வி மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு 2019ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மத்திய அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
