3,000 பேரை தேர்வு செய்ய 22ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
3,000 பேரை தேர்வு செய்ய 22ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM
ADDED : ஜூலை 14, 2023 09:32 AM
சென்னை:
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநிலக் கல்லுாரியில், வரும் 22ம் தேதி, காலை 8:00 மணி முதல் மாலை, 3:00 வரை நடக்கிறது.சென்னை கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது:
இம்முகாமில், 300க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 3,000த்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு முதல், பட்ட படிப்பு, தொழில் கல்வி, தையல் கற்றவர்கள், கணினி இயக்குபவர் உள்ளிட்ட அனைத்து விதமான நபர்களும் பங்கேற்கலாம். முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு 044- 2050 1032 அல்லது pjpsanthome@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
