UPDATED : ஜன 08, 2010 12:00 AM
ADDED : ஜன 08, 2010 10:49 AM
அ நிறம் | அளவு
சென்னை: தண்டலம் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியில், கே.பி.சி., வங்கியில் பணிபுரிய, வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
இம்முகாம் குறித்து, சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் விஜய பாஸ்கர் ராஜு கூறுகையில், “இக்கல்லூரியில் பயின்று பொறியியல் படிப்பை முடிக்கவுள்ள கடைசி ஆண்டு மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வேல்யூ சோர்ஸ் டெக்னாலஜிஸ் சார்ந்த கே.பி.சி., வங்கியில் பணிபுரிய, மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்” என்றார்.
வேலைவாய்ப்பு முகாமை, கல்லூரித் தலைவர் கே.என்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். விழாவில், செயலர் நடராஜன், பேரா.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
