தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் 20ல் துவக்கம்

அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் 20ல் துவக்கம்

அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் 20ல் துவக்கம்


UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM

ADDED : ஜூலை 15, 2023 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM ADDED : ஜூலை 15, 2023 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாடு முழுதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லுாரிகளில் இருந்து 15 சதவீத எம்.பி.பி.எஸ்.,  பி.டி.எஸ்., இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கென கொடுக்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலைகளில் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை, மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனரகத்தின் மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி ஆன்லைனில் நடத்துகிறது. அதன்படி, 2023 - 24ம் கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை, 20ம் தேதி முதல், https://mcc.nic.in என்ற இணையதளத்தில் நடைபெற உள்ளது.இதுகுறித்து, மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு:
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், 20 முதல் 25ம் தேதி நண்பகல் 12:00 மணி வரை பதிவு செய்ய வேண்டும். 25ம் தேதி இரவு 8:00 மணி வரை விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், 22ம் தேதி முதல் 26ம் தேதி நள்ளிரவு 11:55 மணி வரை தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். அவர்களுக்கு 27, 28ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில் கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும்.ஒதுக்கீடு பெற்றவர்கள், 30ம் தேதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இடம் பெற்றவர்கள் ஜூலை 31ம் தேதி முதல் ஆக., 4ம் தேதி வரை கல்லுாரிகளில் சேர வேண்டும். மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், ஆக., 5, 6ம் தேதிகளில் நடைபெறும். இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 9ம் தேதியும், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் ஆக., 31ம் தேதியும், மூன்று கட்ட கவுன்சிலிங்கில் நிரம்பாத இடங்களுக்கான கவுன்சிலிங், செப்., 21ம் தேதியும் துவங்க உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us