தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய நீச்சல் போட்டி: சென்னையில் துவக்கம்

தேசிய நீச்சல் போட்டி: சென்னையில் துவக்கம்

தேசிய நீச்சல் போட்டி: சென்னையில் துவக்கம்


UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM

ADDED : ஜூலை 15, 2023 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 15, 2023 12:00 AM ADDED : ஜூலை 15, 2023 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சென்னையில் முதல் முறையாக, தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ நீச்சல் போட்டி, வரும் 18ம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் மற்றும் தேசிய நீச்சல் சம்மேளனம் இணைந்து, 39வது சப் - ஜூனியர் மற்றும் 49வது ஜூனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகளை நடத்துகின்றன. சென்னை, வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில், வரும் 18-ம் தேதி போட்டிகள் துவங்கி, 22ம் தேதி வரைநடக்கிறது. தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். டைவிங் போட்டியில் குரூப்- 1 பிரிவில், 16, 17, 18 வயதினரும், குரூப் - 2 பிரிவு 14 மற்றும் 15 வயது; குரூப் - 3 பிரிவில் 12 மற்றும் 13 வயதுடைய சிறுவர் - சிறுமியருக்கு தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன.வாட்டர் போலோ விளையாட்டில், 2006ம் ஆண்டுக்குப் பின் பிறந்த ஜூனியர் சிறுவர் - சிறுமியர் பங்கேற்கின்றனர். இதில், ஜூனியர் தேசிய வாட்டர் போலோ போட்டியில் தேர்வு பெறும் சிறுவர் - சிறுமியர், ஜூனியர் ஆசிய வாட்டர் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பர் என, தமிழ்நாடு மாநில நீச்சல் சங்க பொதுச் செயலர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us