UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM
ADDED : ஜூலை 16, 2023 09:55 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
காமராஜரின் 121 வது பிறந்த நாள் விழா, புதுச்சேரி அரசு சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி ராஜா தியேட்டர் சிக்னலில் உள்ள காமராஜர் சிலைக்கு முதல்வர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன் குமார், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் நேரு, ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்., சார்பில் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன், பா.ஜ., சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, வெங்கடேசன், ரிச்சர்டு, மாநில தலைவர் சாமிநாதன், வி.சி. கட்சி சார்பில் ரவிக்குமார் எம்.பி., மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
