தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெங்களூவில் தமிழ் இசை பேருரை

பெங்களூவில் தமிழ் இசை பேருரை

பெங்களூவில் தமிழ் இசை பேருரை


UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM

ADDED : ஜூலை 16, 2023 10:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM ADDED : ஜூலை 16, 2023 10:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரு தமிழ் இலக்கிய பேரவை சார்பில், தமிழ் இசை பேருரை நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை பேராசிரியர் நல்லசிவத்தின் தேவார திருமறை இசை சொற்பொழிவு நடந்தது. தமிழ் குடும்பத்தினர் திரளாக பங்கேற்றனர். பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரையில் அமைந்துள்ள ஒடுக்கத்துார் மடத்தில், பெங்களூரு தமிழ் இலக்கிய பேரவை சார்பில், &'தமிழ் இசை பேருரை&' நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஸ்ருதிகா, ஸ்ரத்தா, நிஷேவிகா என்ற குழந்தைகள், கடவுள் வாழ்த்து பாடினர்.லட்சுமி நல்லபெருமாள், ரத்னா சோமசுந்தரம், மீனா விஸ்வநாதன், சாந்தி ஆறுமுகம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி ைத்தனர். உழவார பணி குழு உறுப்பினர் ஆண்ட அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ் இசை பேருரை இசை வழிபாடும் இனிய வாழ்வும் என்ற பெயரில், இசைச்சொற்பொழிவு நடந்தது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை பேராசிரியர் நல்லசிவம் தேவார திருமறை இசை சொற்பொழிவு நிகழ்த்தினார்.சேத்தன் குழுவினரின் வயலின் வித்வான் ஜி.என்.சாமசுந்தர், மிருதங்க வித்வான் கே.வி.சிவலிங்கய்யா ஆகியோர், பக்க வாத்தியம் வாசித்தனர். சீவதிட்சை அனுஷ்டான விதி குறித்த புத்தகமும் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பெங்களூரு தமிழ் இலக்கிய பேரவை தலைவர் ஆறுமுகம், செயலர் கணபதி சுப்பிரமணியன், சுபா ராஜஸ்ரீ, பேரவை உறுப்பினர்கள் செய்து இருந்தனர். தமிழ் குடும்பத்தினர் திரளாக, பங்கேற்றனர். செயலர் கணபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார். தமிழ் இசை பேருரை நிகழ்ச்சியில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை பேராசிரியர் நல்லசிவம், தேவார திருமறை இசை சொற்பொழிவு நிகழ்த்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us