தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை உயர்வு

மாற்றுத்திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை உயர்வு

மாற்றுத்திறனாளி மாணவர் கல்வி உதவித்தொகை உயர்வு


UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM

ADDED : ஜூலை 16, 2023 10:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM ADDED : ஜூலை 16, 2023 10:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாக, அவர்கள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் முதல் 7,000 ரூபாய் வரை, 2013 - 14ம் நிதியாண்டு முதல் வழங்கப்படுகிறது.இத்தொகையை இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும். அதற்கு, 14.90 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்&' என, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை பரிசீலனை செய்த அரசு, தற்போது வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை, நடப்பாண்டு முதல் இரு மடங்காக உயர்த்தி வழங்கவும், இதற்காக, 14.90 கோடி ரூபாய் ஒதுக்கியும் உத்தரவிட்டுள்ளது.இதற்கான அரசாணையை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் ஆனந்தகுமார் வெளியிட்டு உள்ளார். வகுப்பு - தற்போதைய உதவித்தொகை (ரூபாயில்) - புதிய உதவித் தொகை (ரூபாயில்)1 - 5ம் வகுப்பு - 1,000 - 2,0006 - 8 ம் வகுப்பு - 3,000 - 6,0009 - 12ம் வகுப்பு - 4,000 - 8,000பட்டப்படிப்பு - 6,000 - 12,000தொழிற்கல்வி மற்றும் முதுகலை பட்டம் - 7,000 - 14,000

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us