UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM
ADDED : ஜூலை 16, 2023 04:57 PM
பயன்பாட்டிற்கு வந்த ஒரு வாரத்திலேயே கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்களை ஈர்த்துள்ளது. பலர் சார்ட் ஜிபிடி இடம் கேள்விகளைக் கேட்டு அதன் பதிலையும் அதே கேள்வியினை கூகுளிடம் கேட்டு அதன் பதிலையும் ஸ்க்ரீன் ஷாட் ஆக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், கூகுள் நிறுவனம் பார்ட் என்ற ஏ ஐ செயலியை பி.ப்., 7 ல் அறிமுகம் செய்துள்ளது. ஓபன் ஏ.ஐ. சார்ட் ஜிபிடி-யை அறிமுகப்படுத்திய பிறகு வணிகம், கல்வி, மற்றும் தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஏஐ உற்பத்தி செய்யும் கட்டுரை உள்ளடக்கத்தை மக்கள் அதிகமாக தேடத் தொடங்கியுள்ளனர். கூகுள் நிறுவனம் இதனை ஈடுசெய்யும் வகையில் அதனுடைய லேம்டா என்ற சாட்பாட் சாப்ட்வேரை உபயோகித்து இந்த ஏஐ-யை உருவாக்கியுளளது. டெராபைட்ஸ் ஆல் அளக்கப்படும் இந்த சாப்ட்வேர், மருந்துகளின் கட்டமைப்பைப் பற்றி அறிய அறிவியல் தரவுத்தளங்களை ஸ்கேன் செய்வதில் பெரும் உதவிகரமாக உள்ளது.கூகுளின் இந்த பார்ட் ஏஐ ஆராய்ச்சியாளர்களால் முழுவதுமாக பயிற்சி அளிக்கப்பட்டு தற்பொழுது சோதனைக்காக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் இது பயனர்கள் கேட்கும் கேள்விக்கு இணையத்தை முழுவதுமாக அலசி அதற்கு தொடர்புடைய வார்த்தைகள், வாக்கியங்கள், அல்லது கருத்துக்களைக் கொண்டு விடையளிக்கும். இத்துடன் நில்லாமல், தேடும் தலைப்பை தழுவிய கட்டுரை சுருக்கத்தையும் பயனர்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில் தற்போது சாட் ஜிபிடியின் புகழ் ஐரோப்பா, தென்னமெரிக்க நாடான பிரேசில் உள்ளிட்டவற்றில் நாடுகளில் பரவி வருகிறது.சாட் ஜிபிடியின் மனித வாய்ஸ் ஏஐ புரோக்ராமுக்குப் போட்டியாக கூகுள் பார்டில் 40 மொழிகளில் மனிதர்கள் போலவே சரளமாக உரையாடும் ஏஐ தொழில்நுட்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பயனாளர்கள் கூகுள் லேம்டா பார்டின் குரலை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியையும் அளித்துள்ளது. மேலும் இந்த வாய்ஸின் வேகத்தையும் பயனாளர்களால் கட்டுப்படுத்த முடியுமென கூகுளின் மூத்த இயக்குநர் ஜேக் க்ராவுசிக் தகவல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
