UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM
ADDED : ஜூலை 16, 2023 04:48 PM
சென்னை:
உயர்கல்வி என்பது நம் குழந்தைகளின் உரிமைகளில் ஒன்று. உயர்கல்விக்கு குழந்தைகளின் உளவியலோ, சமூக சூழலோ தடை ஏற்படுத்தினால் அதை தகர்த்தெறிவோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஜூலை19ம் தேதி நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்க வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
பெற்றோர்களே உங்கள் மகனோ, மகளோ பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 வகுப்பு முடிக்காமல் பள்ளியிலிருந்து இடைநின்றிருந்தாலோ அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்பு உயா்கல்வியைத் தொடராமல் விட்டிருந்தாலோ அல்லது அந்த வகுப்புகளில் தோல்வியுற்றிருந்தாலோ அவர்களுக்கு நாம் தான் நல்வழி காட்ட வேண்டும்.உயர்கல்வி என்பது நம் குழந்தைகளின் உரிமைகளில் ஒன்று. உயர்கல்விக்கு குழந்தைகளின் உளவியலோ, சமூக சூழலோ தடை ஏற்படுத்தினால் அதை தகர்த்தெறிவோம். நம் குழந்தைகளில் சிலர் பத்தாம் வகுப்பிற்கு பின் கல்வியைத் தொடராமல் இருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஜூலை19ம் தேதி நடைபெற உள்ள பள்ளி மேலாண்மைக் கூட்டத்தில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் பங்கேற்க வேண்டும்.வரும் ஜூலை 19ம் தேதி மாலை 4 மணிக்கு அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதில், உயர்கல்வி குறித்து உங்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்குவதற்கு வழிகாட்டும் குழுவும் பள்ளிகளில் உங்களுக்காக காத்திருக்கும். அதில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும். அறிவார்ந்த சமுதாயத்தைக் கட்டமைப்போம் வாருங்கள்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
