தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அமெரிக்காவில் கல்வி சீர்திருத்தத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி

அமெரிக்காவில் கல்வி சீர்திருத்தத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி

அமெரிக்காவில் கல்வி சீர்திருத்தத்திற்கு ரூ. 20 ஆயிரம் கோடி


UPDATED : ஜன 08, 2010 12:00 AM

ADDED : ஜன 08, 2010 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2010 12:00 AM ADDED : ஜன 08, 2010 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் அதிக அக்கறை செலுத்தும்படி மக்களை கேட்டு கொண்டுள்ளார், அமெரிக்க அதிபர் ஒபாமா.


வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் இதுகுறித்து ஒபாமா கூறியதாவது:
கணக்கு மற்றும் அறிவியல் முறையில் தான் நமது வாழ்க்கை முறை அடங்கியுள்ளது. எனவே, இந்த பாடத் திட்டங்களில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த பாடப் பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.


மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், அமெரிக்க மாணவன் கணக்கில் 25வது இடமும், அறிவியலில் 21வது இடத்திலும் இருக்கிறான். இந்த நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது. கணிதம் மற்றும் அறிவியலை கற்பிக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். கல்வி சீர்திருத்தத்துக்காக அமெரிக்க அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.


கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் தங்கள் அனுபவங்களையும், பயிற்சி யுக்திகளையும் பரிமாறி கொள்ள தனி வெப்சைட்டை துவங்க வேண்டும். அமெரிக்காவில் உள்ள இரண்டு லட்சத்துக்கும் அதிகமான விஞ்ஞானிகள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று தாங்கள் அறிந்ததை மாணவர்களுக்கு எடுத்து கூறலாம். இதேபோல நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும் மாணவர்களை அழைத்து தேவையானவற்றை கற்பித்து, மாணவர்களை வழி நடத்தலாம்.


ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மாணவர்களுக்கு பரிசளிக்கவும் அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு ஒபாமா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us