நாகர்கோவிலில் 1.50 லட்சம் சதுரடியில் ஐ.டி., பூங்கா
நாகர்கோவிலில் 1.50 லட்சம் சதுரடியில் ஐ.டி., பூங்கா
UPDATED : ஜூலை 17, 2023 12:00 AM
ADDED : ஜூலை 17, 2023 10:39 AM
எல்காட் என்ற எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் தமிழ்நாடு நிறுவனம் சார்பில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 1,288 ஏக்கர் பரப்பளவில், தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, கூடுதலாக பல்வேறு நகரங்களில், புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.இதன்படி, சென்னை, கோவை, திருச்சி நகரங்களில், 6 லட்சம் சதுர அடி அளவிலான பூங்காக்கள் விரைவில் செயல்பாட்டுக்கு வருகின்றன. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவில், புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான சாத்தியக் கூறு ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கான கட்டட வடிவமைப்புகளும், தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது தவிர, ஈரோடு, செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி நகரங்களில், தலா ஒரு லட்சம் சதுர அடியில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.
