தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2 பீஹார் மாணவர்களுக்காக இயங்கும் தொடக்கப் பள்ளி

2 பீஹார் மாணவர்களுக்காக இயங்கும் தொடக்கப் பள்ளி

2 பீஹார் மாணவர்களுக்காக இயங்கும் தொடக்கப் பள்ளி


UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM

ADDED : ஜூலை 18, 2023 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM ADDED : ஜூலை 18, 2023 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சடையகவுண்டன்புதுாரில், 1956ல் துவங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் என இரு ஆசிரியர் பள்ளியாக செயல்பட்டது.கடந்த 90ம் ஆண்டுகளில் 40 மாணவர்கள் படித்தனர். ஆண்டுதோறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து 2014 - 15ல் 12 மாணவர்கள் மட்டுமே படித்தனர். பின் சேர்க்கை படிப்படியாக குறைந்து தற்போது இரண்டு மாணவர்கள் மட்டும் படிக்கும் பள்ளியாக உள்ளது. இதனால், இங்கிருந்த ஒரு ஆசிரியர் பணி மாறுதலில் சென்ற பின், அந்த இடம் காலியாக உள்ளது. தலைமையாசிரியர் மட்டும் பணியில் உள்ளார்.பள்ளியில் பயிலும் இரு மாணவர்களும், பீஹார் மாநில தொழிலாளர்களின் குழந்தைகளாக உள்ளனர். இவர்களும், அவ்வப்போது விடுமுறை எடுத்துச் சென்று விடுகின்றனர். தலைமையாசிரியர் மட்டும் மாணவர்களை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழல் உள்ளது. இந்த கிராமத்தில் 5 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் இல்லை. இங்கிருந்து 1 கி.மீ.,யில் உள்ள செங்குட்டுப்பாளையம் பள்ளிக்கு சில மாணவர்கள் செல்வதால், இந்த பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்ததாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us