தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

அரசு இசைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை


UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM

ADDED : ஜூலை 18, 2023 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM ADDED : ஜூலை 18, 2023 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரண்மனை அருகேயுள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2023-2024 கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12 முதல் 25 வயதிற்குள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி கட்டணம் ஆண்டிற்கு ரூ.350, விலையில்லா பாடபுத்தக்கம் வழங்கப்படும். மாதந்தோறும் ரூ.400 ஊக்கதொகை, இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.மூன்று ஆண்டுகள் பயிற்சி முடித்து, அரசு தேர்ச்சி சான்றிதழ்கள் பெறும் மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம். இசைப்பள்ளிகளிலும், ஹிந்து அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோயில்களிலும் வேலை வாய்ப்பு பெறலாம். மேலும் விபரங்களுக்கு 04567- -220 104 என்ற தொலைபேசி, 99422 67837, 94420 4310, 97516 7470, 95664 73769, 99941 34886 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என முதல்வர் சரவணமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us