UPDATED : ஜூலை 18, 2023 12:00 AM
ADDED : ஜூலை 18, 2023 05:08 PM
அ நிறம் | அளவு
சென்னை:
கடந்த ஆண்டு முதல், தமிழ்நாடு நாள் விழா ஜூலை 18 அன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இன்று அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்கும், தமிழ்நாடு நாள் பேரணி நடக்கிறது.அதேபோல், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், சிறப்பு புகைப்பட கண்காட்சி இன்று முதல், 23ம் தேதி வரை நடக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, மாநில கல்லுாரியின், திருவள்ளுவர் அரங்கில், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் இன்று, தமிழ்நாடு நாள் விழா நடந்த. இதில், கணினி தமிழை வளர்க்கும் மென்பொருளை உருவாக்கிய இருவருக்கு, கணினி தமிழ் விருது வழங்கப்படுகிறது.
