UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM
ADDED : ஜூலை 19, 2023 09:01 AM
சென்னை:
உலக தமிழ் ஆராய்ச்சி மன்றம் மற்றும் மலேசிய பல்கலை சார்பில் ஜூலை 21 முதல் 23ம் தேதி வரை மலேசியாவில் 11வது உலக தமிழாராய்ச்சி மாநாடு நடக்க உள்ளது.இந்த மாநாட்டுக்கு, மலேசிய அரசும், தமிழக அரசும் முழு ஆதரவு அளிப்பதாக, மாநாட்டு குழு தெரிவித்துள்ளது. இதில், 136 நாடுகளில் இருந்து, 63 மொழி அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர். 63 மொழிகளில், தமிழின் சிறந்த படைப்புகள் வெளியிடப்பட உள்ளன.மேலும், இணைய வழி தமிழ், ஊடக தமிழ், கல்வி தமிழ், பாரம்பரிய மருத்துவத்தில் தமிழரின் தொலைநோக்கு அறிவியல் பார்வை உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில், உரைகளும் கட்டுரைகளும் இடம்பெற உள்ளன. மாநாட்டு தலைவராக, மலேசிய பேராசிரியர் மாரிமுத்துவும், பொதுச் செயலர்களாக சிங்கப்பூர் டாக்டர் தின்னப்பன், நந்தன், பிரஷாந்தன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
