தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் ஆய்வு விருது: ஆன்லைன் பதிவு செய்யலாம்

அறிவியல் ஆய்வு விருது: ஆன்லைன் பதிவு செய்யலாம்

அறிவியல் ஆய்வு விருது: ஆன்லைன் பதிவு செய்யலாம்


UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM

ADDED : ஜூலை 19, 2023 09:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM ADDED : ஜூலை 19, 2023 09:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மத்திய அரசின் புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு, ஆன்லைன் வழியே பள்ளிகள் பதிவு செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் 10ம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது வழங்கப்படுகிறது.இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
மத்திய அரசின் இன்ஸ்பையர் அவார்டு என்ற புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கு, மாணவர்களின்விபர பதிவு நடந்து வருகிறது. ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு வகுப்பிலும் தலா ஒரு மாணவர் பெயரை, /www.inspireawards-dst.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஆக.,31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.எனவே, பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதற்கான நடவடிக்கை மேற்கொண்டு, விருதுக்கான மாணவர் விபரத்துடன், இதற்காக பொறுப்பு ஆசிரியர் ஒருவரின் மொபைல் போன் எண் மற்றும் பள்ளி இ - மெயில் முகவரியையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us