தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழா

நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழா

நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழா


UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM

ADDED : ஜூலை 19, 2023 09:34 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM ADDED : ஜூலை 19, 2023 09:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:
இளைஞர்கள் எப்போதும் புதியவைகளை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தோடு இருக்க வேண்டும் என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு தலைவர் பிபேக் டெப்ராய் தெரிவித்தார்.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 29வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் ரவி, 984 ஆய்வு மாணவர்கள் மற்றும் 105 பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த ஆண்டு 43,861 பேர் பட்டம் பெறுகின்றனர். இதில், 30,625 பேர். அதாவது 70 சதவீதம் பேர் பெண்கள்.சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமரின் பொருளாதார ஆசிரியர் ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் பிபேக் டெப்ராய் பேசியதாவது:மனோன்மணியம் சுந்தரனார் 1855ல் பிறந்தார். அவர் பிறந்த நுாறு ஆண்டுகள் கழித்து 1955ல் நான் பிறந்தேன். அந்த கால கட்டங்களையும், தற்போதைய நிலையும் ஒப்பிடுகையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் நாளந்தா, தட்சசீலா பல்கலைக்கழகங்கள் மிகவும் பழமையானவை. அவை மேற்கத்திய பல்கலைக் கழகங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தன. மாணவர்கள் எப்போதும் புதியவைகளை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை விட்டு விடக்கூடாது.மகிழ்ச்சி என்பது வெளி நபர்களிடமிருந்தோ வெளியில் உள்ள பொருட்களில் இருந்தோ வருவதில்லை; அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது. உங்களுக்குள் இருக்கும் திறமைகளை நீங்கள் உணர வேண்டும். இளைய தலைமுறையான நீங்கள் 2047க்குள் இந்த நாட்டை வளம் பொருந்திய நாடாக கட்டமைக்க வேண்டும். இங்கு பட்டம் பெற்று செல்லும் நீங்கள், இந்த தேசத்தின் துாதர்களாக இருக்க வேண்டும். அடுத்த 40 ஆண்டுகளுக்கு பின், இங்கு நடக்கும் பட்டமளிப்பு விழாவில் நீங்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.வழக்கமாக, பல்கலை பட்டமளிப்பு விழாக்களில் பேசும் கவர்னர் ரவி, சமீபகாலமாக பேசுவதில்லை. தி.மு.க.,வினர் ஆப்சென்ட்
இப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்பதாக இருந்தது. அவருக்கு பல்கலை சார்பில் வரவேற்பு பதாகைகள் வைத்திருந்தனர். அமலாக்கத்துறை விசாரணையால் அவர் வராததால் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்கள் கட்சியினர் யாரும் வரவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us