UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM
ADDED : ஜூலை 19, 2023 05:42 PM
அ நிறம் | அளவு
உடுமலை:
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக (தொடக்கக்கல்வி) மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா, நியமிக்கப்பட்டுள்ளார்.திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக (தொடக்க கல்வி) பணியாற்றி வந்த அமுதா, 59. ஆசிரியர் ஒருவரிடம் பணிப்பதிவேடு வழங்க, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றார். இம்மாதம் 6ம் தேதி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர். இதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், தொடக்க கல்வி பணிகளை கவனிக்க, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கல்வி) பொறுப்பை கூடுதலாக வழங்கி உத்தரவிட்டார்.
