தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/502 நுாலகங்களை புனரமைக்க நடவடிக்கை

502 நுாலகங்களை புனரமைக்க நடவடிக்கை

502 நுாலகங்களை புனரமைக்க நடவடிக்கை


UPDATED : ஜூலை 20, 2023 12:00 AM

ADDED : ஜூலை 20, 2023 09:19 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2023 12:00 AM ADDED : ஜூலை 20, 2023 09:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், 502 நுாலகங்களை புனரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து, பொது நுாலகத்துறை பணியாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் தியாகராஜன், கூறியதாவது:
கடந்த, 12 ஆண்டாக பள்ளி கல்வித்துறை கூடுதல் பொறுப்பில், பொது நுாலகத் துறை இருந்தது. கடந்தாண்டு, இளம்பகவத் ஐ.ஏ.எஸ்., முழு கூடுதல் பொறுப்பில் நுாலகத் துறை கொண்டு வரப்பட்டது. தற்போது அவர், நிரந்தர நுாலக இயக்குனராக பணியமர்த்தப்பட்டுள்ளார். இவரது நடவடிக்கை மூலம், நுாலக பணியாளர்கள் வருகை, ஆன்லைன் பதிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. நுாலக வரி, நேரடியாக அரசுக்கு செலுத்தப்பட்டு, தேவையான நிதி, ஆறு மாதத்துக்கு ஒருமுறை மொத்தமாக, நுாலகத்துக்கு திரும்ப பெறும் நிலை ஏற்பட்டுஉள்ளது. மேலும், நபார்டு வங்கியில் மானியத்தில் 500 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு 32 மாவட்டத்திலும், 502 நுாலகங்கள் புனரமைக்கப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us