தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒதுக்கீடு பெற்று சேராவிட்டால் நீட் தேர்வு எழுத தடை

ஒதுக்கீடு பெற்று சேராவிட்டால் நீட் தேர்வு எழுத தடை

ஒதுக்கீடு பெற்று சேராவிட்டால் நீட் தேர்வு எழுத தடை


UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM

ADDED : ஜூலை 21, 2023 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM ADDED : ஜூலை 21, 2023 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அகில இந்திய மருத்துவ மாப் - அப் கவுன்சிலிங்கில் இடங்கள் பெற்று, கல்லுாரிகளில் சேராதவர்களுக்கு, ஓராண்டு நீட் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலை, மத்திய பல்கலைகளில் உள்ள இடங்களுக்குமான மாணவர் சேர்க்கை, நடத்தப்பட உள்ளது. அதன்படி, 2023 - 24ம் கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை பதிவு, நேற்று முதல் https://mcc.nic.in என்ற இணையதளத்தில் துவங்கியது. நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், வரும் 25ம் தேதி, மதியம் 12:00 மணி வரை பதிவு செய்யலாம்.அன்று இரவு 8:00 மணி வரை, விண்ணப்ப கட்டணம் செலுத்தலாம். மாணவர்கள், வரும் 22 முதல் 26ம் தேதி இரவு, 11:55 மணி வரை, தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளில், இடங்களை தேர்வு செய்யலாம். அவர்களுக்கு, 27, 28ம் தேதிகளில் தரவரிசை பட்டியல் அடிப்படையில், கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒதுக்கீடு பெற்றவர்கள், 30ம் தேதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் வரும் 31 முதல் ஆக., 4ம் தேதி வரை கல்லுாரிகளில் சேர வேண்டும். மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், ஆக., 5, 6ம் தேதிகளில் நடக்கும்.இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 9ம் தேதியும், மூன்றாம் கட்ட கவுன்சிலிங் ஆக., 31ம் தேதியும், மூன்று கட்ட கவுன்சிலிங்கில் நிரம்பாத இடங்களுக்கான, மாப்-அப் கவுன்சிலிங், செப்., 21ம் தேதியும் துவங்குகிறது. இறுதிகட்டத்தில் இடங்கள் பெற்று, கல்லுாரிகளில் சேராதவர்கள், அடுத்த ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுத தடை விதித்து, மருத்துவ கவுன்சில் கமிட்டி உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us