பல்கலை.,யில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: பொன்முடி
பல்கலை.,யில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்: பொன்முடி
UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM
ADDED : ஜூலை 22, 2023 09:53 AM
அ நிறம் | அளவு
சென்னை:
பல்கலைகளில் உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.துணைவேந்தர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
தமிழக பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரம் உலகளவில் உயர்த்தப்படுவதே இலக்கு. காலியாக உள்ள பல்கலை பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் அலுவலர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும். பல்கலை, கல்லூரிகளில் ஒரே மாதிரி பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மாணவர்களும் பேராசிரியர்களும் கல்லூரி மாறும் போது உதவியாக இருக்கும். 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
