UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM
ADDED : ஜூலை 22, 2023 10:32 AM
அ நிறம் | அளவு
சென்னை:
அனைத்து அரசு பல்கலைகளிலும், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ஒரே பாடத்திட்டம் அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்கலை மற்றும் கல்லுாரி பேராசிரியர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இந்த நிலைப்பாட்டை கண்டித்தும், பொது பாடத்திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும், நேற்று தமிழகம் முழுதும் பல்கலைகளின் முன், பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னைப் பல்கலை வளாகத்தில், கல்லுாரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், பொது பாடத்திட்டத்துக்கு எதிராக பேராசிரியர்கள் கோஷமிட்டனர்.
