தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக பல்கலைக்கு டி.வி.ஆர்., பெயர்: நினைவு அஞ்சலி கூட்டத்தில் தீர்மானம்

தமிழக பல்கலைக்கு டி.வி.ஆர்., பெயர்: நினைவு அஞ்சலி கூட்டத்தில் தீர்மானம்

தமிழக பல்கலைக்கு டி.வி.ஆர்., பெயர்: நினைவு அஞ்சலி கூட்டத்தில் தீர்மானம்


UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM

ADDED : ஜூலை 23, 2023 10:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM ADDED : ஜூலை 23, 2023 10:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மணிமேகலைப் பிரசுரம் மற்றும் மதுரையின், அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் இணைந்து தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 39ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி சென்னை, தி.நகரில் நடத்தப்பட்டது. தி.நகரில் உள்ள மணிமேகலைப் பிரசுரம் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், ஆன்மிக அறிஞர் மற்றும் எழுத்தாளர் சஞ்சீவி ராஜா சுவாமிகள் தலைமை வகித்தார்.அமுதசுரபி இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்.சி.மோகன்தாஸ், மதுரையின் அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர், முன்னிலை வகித்தனர். டி.வி.ராமசுப்பையரின் திருவுருவப் படத்திற்கு, மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன் மாலை அணிவிக்க, நிகழ்வில் பங்கேற்ற அனைவரும், புஷ்பாஞ்சலி செலுத்தினர். பின், டி.வி.ராமசுப்பையருக்கு சிலை அமைக்க வேண்டும்; தமிழகத்தில் உள்ள பல்கலை ஒன்றுக்கு, அவர் பெயர் சூட்டப்பட வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து, டி.வி.ஆருக்கு புகழஞ்சலி செலுத்தி, சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.அதன் விபரம்:
மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன்:
இக்காலத்தில் பத்திரிகை என்பது நவீனமயமாகி விட்டது. ஆனால், தினமலர் நாளிதழை, டி.வி.ஆர்., மிகவும் சாதாரண நிலையில் துவங்கி, புரட்சிகரமாக நடத்தினார். அவரது சிறப்பை இளம் தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில், சிலை அமைப்பதுடன், பல்கலைக்கு அவர் பெயர் சூட்டப்பட வேண்டும்.எழுத்தாளர் என்.சி. மோகன்தாஸ்:
சமூக அக்கறை கொள்கையுடன், உண்மையின் உரைகல் என்பது பெயர் அளவில் இல்லாமல், தொடர்ந்து தினமலர் நாளிதழ் செயல்பட்டு வருகிறது. இதற்கான நங்கூரம் செலுத்தி வைத்திருப்பவர், அதன் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர். மதுரை அட்சயப் பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு:
கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைவதற்கு மூலக்காரணமாக இருந்தவர், டி.வி.ராமசுப்பையர். ஆரம்ப காலத்தில், பத்திரிகையை தன் தோளில் சுமந்து, உலகளவில் தலைசிறந்த பத்திரிகையாகவும், தமிழகத்தில் முதுகெலும்பு உள்ள நாளிதழாகவும் உருவாக்கிஉள்ளார்.அமுதசுரபி இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்:
டி.வி.ஆர்., என்ற மூன்று எழுத்து மந்திரச் சொல், துணிச்சல், நேர்மை, நம்பிக்கையை பறைசாற்றுகிறது. அவருக்கு மரியாதை செலுத்துவதுடன், இக்கால பத்திரிகையாளர்கள்அவரது துணிச்சல், நேர்மை அறிந்து பின்பற்ற வேண்டும். ஆன்மிக எழுத்தாளர் சஞ்சீவி ராஜா சுவாமிகள்:
டி.வி.ஆர்., காலத்தால் அழியாதவர்; தினமலர் நாளிதழ் துவங்கி, அவர் எப்படி வெற்றி பெற்றார்; பத்திரிகையை எப்படி வெற்றி பெற செய்தார் என, இளைய பத்திரிகையாளர்கள் அறிய வேண்டும். அவர் விதைத்தது நேர்மை; இதனால், தினமலர் இன்னும் நேர்மையான விருட்சமாக தான் வளரும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us