தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடமாறுதலுக்கு பேரம்: ஆசிரியர் மன்றம் புகார்

இடமாறுதலுக்கு பேரம்: ஆசிரியர் மன்றம் புகார்

இடமாறுதலுக்கு பேரம்: ஆசிரியர் மன்றம் புகார்


UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM

ADDED : ஜூலை 23, 2023 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM ADDED : ஜூலை 23, 2023 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ப.வேலுார்:
ஆசிரியர் இடமாறுதலுக்கு பேரம் பேசுவதாக, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், கபிலர்மலை வட்டார கல்வி அலுவலரிடம், ஆசிரியர்கள் மனு அளித்தனர்.நாமக்கல், கபிலர்மலையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில், 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலரிடம், நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:பொத்தனுார் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மேகலா, குமாரபாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் நர்மதா ஆகியோர், இடமாறுதல் கேட்டு பல மாதங்களுக்கு முன் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதுவரை இடமாறுதலுக்கான ஆணை வழங்கப்படாமல், பேரம் பேசுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் இடமாறுதல் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து, இடமாறுதல் ஆணை வழங்க உத்தரவிட வேண்டுமாறு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து, வட்டார கல்வி அலுவலகம் முன் நடந்த கூட்டத்தில், கண்டனம் கோஷம் எழுப்பினர். மாவட்ட செயலாளர் சங்கர், கபிலர்மலை ஒன்றிய தலைவர் மணிவண்ணன் மற்றும் பொருளாளர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us