மருத்துவ படிக்க மாற்றுத்திறனாளி 79 பேருக்கும் வாய்ப்பு
மருத்துவ படிக்க மாற்றுத்திறனாளி 79 பேருக்கும் வாய்ப்பு
UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM
ADDED : ஜூலை 23, 2023 10:51 AM
சென்னை:
மருத்துவ படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் விண்ணப்பித்து தகுதி பெற்ற, 79 பேருக்கும் இந்தாண்டு மருத்துவ படிப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை வரும், 25ம் தேதி முதல் நடைபெற உள்ளது.இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களுக்கான வாரிசு பிரிவில் தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் குறித்த பட்டியல் https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி 10 எம்.பி.பி.எஸ்., ஒரு பி.டி.எஸ்., இடங்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கான பிரிவில், 328 பேர் தகுதி பெற்றுள்ளனனர். 7 எம்.பி.பி.எஸ்., ஒரு பி.டி.எஸ்., இடங்களுக்கான விளையாட்டு பிரிவில், 114 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஆனால் 215 எம்.பி.பி.எஸ்., 11 பி.டி.எஸ்., இடங்கள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பிரிவிற்கு, 79 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். எனவே, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தகுதி பெற்றுள்ள 79 பேருக்கும் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
