UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM
ADDED : ஜூலை 23, 2023 11:09 AM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி:
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் எனும் தனியார் ராக்கெட் நிறுவனம் செயல்படுகிறது. இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர்கள், விஞ்ஞானிகள் இதனை நடத்துகின்றனர். அரசு, தனியார் நிறுவனங்களின் சிறிய ரக ராக்கெட்களை ஏவும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு நவ.,18ல் விக்ரம் ராக்கெட்டை ஏவியது.திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியிலுள்ள இஸ்ரோ திரவ திட்ட இயக்க மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ராமன் II இன்ஜின் 10 வினாடிகள் வெற்றிகரமாக இயங்கியது. இம்மையத்தில் தற்போது முதன்முறையாக தனியார் ராக்கெட் இன்ஜின் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
