UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM
ADDED : ஜூலை 23, 2023 11:15 AM
அ நிறம் | அளவு
சென்னை:
மலேஷியாவில் நடந்து வரும் 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில், நேற்று முன்தினம் 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு துவங்கியது; இன்று நிறைவடைய உள்ளது. இம்மாநாட்டில், அ.தி.மு.க., சார்பில், அக்கட்சி இலக்கிய அணி செயலரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் பங்கேற்றார். மாநாடு ஏற்பாட்டாளர்களிடம், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வாழ்த்து செய்தியை வழங்கினார்.
