தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நடிகர்களை போல் தலைமுடி வெட்டாதீர்கள்: பள்ளி முதல்வர் கடிதம்

நடிகர்களை போல் தலைமுடி வெட்டாதீர்கள்: பள்ளி முதல்வர் கடிதம்

நடிகர்களை போல் தலைமுடி வெட்டாதீர்கள்: பள்ளி முதல்வர் கடிதம்


UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM

ADDED : ஜூலை 23, 2023 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 23, 2023 12:00 AM ADDED : ஜூலை 23, 2023 12:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகல்கோட்:
உயர்நிலை பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியர், சலுான் உரிமையாளரிடம் விசித்திரமான கோரிக்கையை வைத்துள்ளார்.பொதுவாக ஸ்டார் நடிகர்கள் செய்து கொள்ளும், மாறுபட்ட சிகை அலங்காரம் இளைஞர்கள் இடையே தாக்கத்தை ஏற்படுத்தும். அது போன்று தாங்களும், சிகை அலங்காரம் செய்து கொள்வதில், ஆர்வம் காண்பிப்பர். ஹெப்புலி என்ற கன்னட திரைப்படத்தில், நடிகர் சுதீப்பின் சிகை அலங்காரம் வித்தியாசமாக இருந்தது. இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் இது போன்று செய்து கொள்கின்றனர். தற்போது இந்த பழக்கம், பள்ளி சிறுவர்களையும் தொற்றி உள்ளது. பாகல்கோட், ஜமகன்டியின் குலஹள்ளி கிராமத்தின், அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும், விசித்திரமான சிகை அலங்காரம் செய்து, பள்ளிக்கு வருகின்றனர். இதை பார்த்து பள்ளி முதல்வர் எரிச்சல் அடைந்துள்ளார். இதை தொடர்ந்து கிராமத்தில், முடி திருத்தும் கடை வைத்துள்ள சென்னப்பா சித்தராமப்பா நாவிக்கு, பள்ளி முதல்வர் சிவாஜி நாயக் எழுதிய கடிதம்:
பள்ளி மாணவர்கள், ஹெப்புலி பாணியில, சிகை அலங்காரம் செய்து கொள்கின்றனர். தலையின் ஒரு ஓரத்தில், முடியை வெட்டி விட்டு, மற்றொரு ஓரத்தில் முடியை வைத்துள்ளனர். இத்தகைய செயலால், அவர்களுக்கு கல்வியில் ஆர்வம் குறைகிறது. பள்ளி மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி தலைமுடியை திருத்துங்கள். உங்கள் கடையில் ஹெப்புலி பாணியில், மாணவர்கள் யாராவது சிகை அலங்காரம் செய்ய வந்தால், உடனடியாக அந்த மாணவரை பற்றி, எனக்கோ அல்லது பெற்றோருக்கோ தகவல் தெரிவியுங்கள். மாணவர்களுக்கு விசித்திரமாக, தலைமுடி வெட்டாதீர்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us