தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போதைப் பொருள் தடுப்பு பிரிவு கல்லுாரிகளிக்கு அழைப்பு

போதைப் பொருள் தடுப்பு பிரிவு கல்லுாரிகளிக்கு அழைப்பு

போதைப் பொருள் தடுப்பு பிரிவு கல்லுாரிகளிக்கு அழைப்பு


UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM

ADDED : ஜூலை 26, 2023 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM ADDED : ஜூலை 26, 2023 09:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
கல்லுாரிகளில் போதை பொருள் தடுப்பு பிரிவு உருவாக்க வேண்டும் என சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா தெரிவித்தார்.புதுச்சேரியில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கம் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லுாரி மாணவர்கள் மத்தியில் இந்த பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் மருத்துவம், பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகளின் டீன், மக்கள் தொடர்பு அதிகாரி, மாணவர் நல சங்க நிர்வாகிகளுடன், போலீசாரின் ஆலோசனைக் கூட்டம் நேற்று போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு தலைமை வகித்து, சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா பேசியதாவது:
கஞ்சா பழக்கத்தால் மாணவர்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர். இதனால், ஒவ்வொரு கல்லுாரியிலும் பேராசிரியர், மாணவர்கள் அடங்கிய போதை பொருள் தடுப்பு பிரிவு உருவாக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் பழக்க வழக்கம், நடவடிக்கைகளை கவனித்து ஏதேனும் மாறுபாடுகள் கண்டறிந்தால் உடனடியாக பெற்றோரை, கல்லுாரிக்கு வரவழைத்து விசாரிக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு கவுன்சிலிங் அளிக்க அறிவுருத்தினார். கூட்டத்தில், எஸ்.பி.,க்கள் ரவிகுமார், ஜிந்தா கோதண்டராமன், பக்தவச்சலம், சுவாதிசிங், வம்சீதரெட்டி மற்றும் 49 கல்லுாரிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us