தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனுமார் ஓவியத்தின் பிம்பத்தில் தெரியும் ராமர்: இஸ்லாமியர் அசத்தல்

அனுமார் ஓவியத்தின் பிம்பத்தில் தெரியும் ராமர்: இஸ்லாமியர் அசத்தல்

அனுமார் ஓவியத்தின் பிம்பத்தில் தெரியும் ராமர்: இஸ்லாமியர் அசத்தல்


UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM

ADDED : ஜூலை 27, 2023 09:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM ADDED : ஜூலை 27, 2023 09:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
குஜராத்தை சேர்ந்த இஸ்லாமிய ஓவியர் அக்பர் மொமின், ஹிந்து கடவுளான அனுமாரின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார். இதில் புதுமையாக அதன் கண்ணாடி பிம்பத்தில் கடவுள் ராமரின் உருவமாக தெரியும்படி அவர் வரைந்த நுட்பமான ஓவியம் வைரலாகியுள்ளது.ஓவியங்களை கலைநயத்துடன் ரசித்து வரைவதை பார்த்திருப்போம். அந்த கலையிலும் புதுமையை புகுத்தி, வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது வெகுசிலரே. ஒரு உருவத்தை அசல் போன்று பிரம்மிப்புடன் வரையும் 3டி வடிவிலான ஓவியத்திற்கு இன்றைக்கு மவுசு அதிகமாகியுள்ளது. அதிலும் எப்படி வித்தயாசத்தை காட்டுவது என யோசித்து அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார் குஜராத்தை சேர்ந்த 69 வயதான ஓவியர் அக்பர் மொமின்.இஸ்லாமியரான இவர் ஹிந்து கடவுளான அனுமாரை 3டி ஓவியமாக தீட்டி அசத்தியுள்ளார். அதிலும் அந்த ஓவியத்தை கண்ணாடி முன்பாக காட்டினால், கடவுள் ராமரின் பிம்பம் தெரிகிறது. அதாவது ஒரே ஓவியத்தில் இரு வேறு கோணங்களில் இரு ஹிந்து கடவுள்களை வரைந்து அசத்தியுள்ளார் இஸ்லாமிய ஓவியர் அக்பர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், முன்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சேர்ந்தும் ஒரே ஓவியமாக தீட்டியுள்ளார். ஓவியத்தில் பிரதமர் மோடியும், பிம்பத்தில் அமித்ஷாவும் தெரிவதுபோல் வரைந்து பிரமிக்க வைத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us