தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் ஜி20 கூட்டம்: மத்திய அமைச்சர் பங்கேற்பு

சென்னையில் ஜி20 கூட்டம்: மத்திய அமைச்சர் பங்கேற்பு

சென்னையில் ஜி20 கூட்டம்: மத்திய அமைச்சர் பங்கேற்பு


UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM

ADDED : ஜூலை 28, 2023 06:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM ADDED : ஜூலை 28, 2023 06:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஜி20 மாநாட்டின், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை பணிக்குழுவின் நான்காவது கூட்டம், சென்னையில் நேற்று துவங்கியது.இதன் ஒரு பகுதியாக, ஆதார வள பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதார தொழில் கூட்டணியை, மத்திய வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், நேற்று துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது:
தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஊக்குவித்தல், அறிவு பரிமாற்றம், புதிய கண்டுபிடிப்புகளை அதிகரித்தல், நிதி வாய்ப்பை விரிவுபடுத்துவதற்கான ஆலோசனைகளின் பரிமாற்றம் ஆகியவற்றில், ஆதார வளங்கள் பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதார தொழில் துறை கூட்டணி, முக்கிய பங்கு வகிக்கும். தொழில் துறை தலைமையிலான கூட்டணி, ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதாரத்திற்கு அடித்தளமாக அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், ஐரோப்பிய ஒன்றிய சுற்றுச்சூழல் ஆணையர், கனடா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், மொரீஷியஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us