26,000 மாணவர் வெளியேற்றம் மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டனம்
26,000 மாணவர் வெளியேற்றம் மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டனம்
UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM
ADDED : ஜூலை 29, 2023 08:38 AM
சென்னை:
பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடி சமுதாயங்களை சேர்ந்த மாணவர் இடைநிற்றலை தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை:
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஐ.ஐ.டி., நிறுவனங்களும், மத்திய பல்கலைக்கழகங்களும் நாட்டிலேயே மதிப்புமிக்க நிறுவனங்களாக பார்க்கப்படுகின்றன. ஆனால், அங்கு கடும் பயிற்சிக்கு பின் இடம் பிடிக்கும், எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., மற்றும் சிறுபான்மையினர் சமூக மாணவர்கள் 26,000 பேர் பாதியில் வெளியேறியுள்ளனர். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.பல்வேறு தகுதி தேர்வுகளிலும், நுழைவு தேர்வுகளிலும் வென்று இந்த உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணவர்கள் படிக்க முடியவில்லை. சொந்த காரணம் மற்றும் மருத்துவ காரணங்களால் இடையில் நின்று போகின்றனர் என, மத்திய அரசு பட்டியலிடும் காரணங்கள் கண்துடைப்பாக உள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடி சமுதாயங்களை சேர்ந்த மாணவர் இடைநிற்றலை தவிர்த்து, தங்களின் உயர்கல்வியை முழுதுமாக முடித்துவெளியேறுவதற்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்.இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
