தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பதவி உயர்வு கேட்டு வழக்கு: அண்ணாமலை பல்கலைக்கு உத்தரவு

பதவி உயர்வு கேட்டு வழக்கு: அண்ணாமலை பல்கலைக்கு உத்தரவு

பதவி உயர்வு கேட்டு வழக்கு: அண்ணாமலை பல்கலைக்கு உத்தரவு


UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM

ADDED : ஜூலை 29, 2023 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM ADDED : ஜூலை 29, 2023 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், இணைப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரியதை, மூன்று மாதங்களில் பரிசீலித்து உத்தரவிடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும் இணைப் பேராசிரியர்கள் தாக்கல் செய்த மனுக்களில், உரிய தகுதி இருந்தும், பேராசிரியராக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. துணை வேந்தருக்கு மனு அளித்தோம். 2015 ஜூலை முதல், பேராசிரியராக பதவி உயர்வு வழங்க, அண்ணாமலை பல்கலைக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மனுக்களை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
உதவி பேராசிரியர் பதவியில் இருந்து இணை பேராசிரியராக, 2015ல் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது; 2018ம் ஆண்டில், மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்று விட்டனர்; அதனால் பேராசிரியர் பதவிக்கு தகுதி உள்ளது என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பல்கலை மானியக் குழு அல்லது அண்ணாமலை பல்கலை விதிமுறைகளில் இல்லாதபோது, இரண்டு கட்ட பதவி உயர்வு கோருவதை ஏற்க முடியாது.இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், 60க்கும் மேற்பட்ட இணைப் பேராசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், வழக்கறிஞர்கள் எம்.வேல்முருகன், ஆர்.சிவகுமார் ஆகியோர் ஆஜராகினர்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
பரிசீலனைக் குழுவை அமைக்க, அண்ணாமலை பல்கலை தவறியதால், பதவி உயர்வுக்கு பரிசீலிக்கும் உரிமையை மனுதாரர்களுக்கு மறுக்கக் கூடாது. யு.ஜி.சி., விதிகளில் கூறியுள்ள தகுதியை பூர்த்தி செய்யும் மனுதாரர்கள், இரண்டு கட்ட பதவி உயர்வு பெற உரிமை உள்ளது. எனவே, பேராசிரியர்களாக பதவி உயர்வு கோரும் மனுதாரர்களின் விண்ணப்பங்களை, அண்ணாமலை பல்கலை பரிசீலித்து, மூன்று மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us