தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கண்காட்சியில் ஓவியப்போட்டி பெருந்துறை மாணவன் முதலிடம்

கண்காட்சியில் ஓவியப்போட்டி பெருந்துறை மாணவன் முதலிடம்

கண்காட்சியில் ஓவியப்போட்டி பெருந்துறை மாணவன் முதலிடம்


UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM

ADDED : ஜூலை 29, 2023 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM ADDED : ஜூலை 29, 2023 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஈரோட்டில், மத்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், இரண்டாவது நாளாக புகைப்பட கண்காட்சி, மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. டிஜிட்டல் இந்தியா தலைப்பில், கல்லுாரி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நேற்று நடந்தது. பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பெருந்துறை ஹிந்துஸ்தான் கல்லுாரி மாணவர் தரணிதரன் முதலிடம் பிடித்து, 2,500 ரூபாய்க்கான காசோலை பெற்றார். ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி மாணவர் தங்கராஜ் இரண்டாமிடம் பிடித்து, 1,500 ரூபாய் காசோலை; மொடக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரி தீபக் நிவேதிதன் மூன்றாமிடம் பிடித்து, 1,000 ரூபாய் வென்றார். போட்டியில் டிஜிட்டல் இந்தியாவை இணைத்து, பிரதமர் மோடியின் படம் வரைந்த ஓவியம், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us