தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆக., 5ல் வேலைவாய்ப்பு முகாம்

ஆக., 5ல் வேலைவாய்ப்பு முகாம்

ஆக., 5ல் வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM

ADDED : ஜூலை 29, 2023 11:04 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM ADDED : ஜூலை 29, 2023 11:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, தனியார் வேலைவாய்ப்பு முகாம், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், ஆக., 5ம் தேதி காலை, 8:00 மணிக்கு நடக்கிறது.ஜவுளி, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி., ஆட்டோமொபைல்ஸ், மருத்துவம் சார்ந்த தனியார் துறைகள் உள்ளிட்ட, 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில்கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என, அனைத்து பிரிவினரும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம்.தங்களது சுய விபரம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம். முகாமில் பங்கேற்க வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம். தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன உத்தரவு உடனுக்குடன் வழங்கப்படும். இவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்தாகாது. முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது, cbejobfair2021@gmail.com என்ற முகவரியில் அனுப்பலாம்.வேலை அளிப்போர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில், Employer Loginல் விபரங்களை பதிவு செய்வது அவசியம். விபரங்களுக்கு, 97901 99681 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us