தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூ.36 கோடியில் எக்ஸ்போர்ட் ஹப்

ரூ.36 கோடியில் எக்ஸ்போர்ட் ஹப்

ரூ.36 கோடியில் எக்ஸ்போர்ட் ஹப்


UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM

ADDED : ஜூலை 30, 2023 02:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2023 12:00 AM ADDED : ஜூலை 30, 2023 02:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
திருப்பூர் பனியன் தொழிலை, அடுத்தகட்டத்துக்கு உயர்த்தும் வகையில், எக்ஸ்போர்ட் ஹப் எனப்படும் ஏற்றுமதி மையம் அமைக்க, இடம்தேடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளன.பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னோடியாக விளங்கும் திருப்பூர் மாவட்டமும், ஏற்றுமதி மையம் அமைக்கும் திட்டத்தில் தேர்வாகியுள்ளது. மாவட்டத்தின் ஏற்றுமதியை செம்மைப்படுத்தி, மேம்படுத்துவதற்காக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.வர்த்தக மேம்பாடு, தொடர் மேம்பாட்டு ஆய்வுகள், திறன் மேம்பாட்டு பயிற்சி, சோதனை கூடங்கள் போன்றவற்றை அமைக்க, கண்காட்சி வளாகம், கருத்தரங்கு கூட்டரங்கு போன்ற வசதிகளுடன், ஏற்றுமதி மையம் அமைக்கப்படுகிறது.இத்திட்டம், மத்திய அரசின் 60 சதவீதம், மாநில அரசு 20 சதவீதம், பிரதான ஏற்றுமதி அமைப்பு, 20 சதவீதம் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். தலா, 36 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு கிடைக்கும். கடந்த வாரம், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், ஏற்றுமதி மையம் அமைவதற்கான ஆலோசனை நடந்துள்ளது.திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன், இணை செயலாளர் குமார் மற்றும் திருப்பூர் ஜவுளித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். முதல்கட்டமாக, இடம் தேர்வு செய்யப்பட வேண்டும்; அடுத்தகட்டமாக, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென ஆலோசிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us