ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவி செய்ய நீதிபதி அறிவுரை
ஏழை மாணவர்கள் கல்விக்கு உதவி செய்ய நீதிபதி அறிவுரை
UPDATED : ஜூலை 31, 2023 12:00 AM
ADDED : ஜூலை 31, 2023 06:13 PM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் செவிலிமேடு சுவாமி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.இதில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணா பிரசாத் பங்கேற்று, மாணவர்கள். படித்து நல்ல நிலைக்கு வந்த பின் ஏழை எளிய மாணவர்கள் கல்விக்கு உதவி செய்ய வேண்டும் என பேசினார். பள்ளி தாளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். அரசு பொது தேர்வில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று சிறந்து விளங்கிய 63 மாணவ - மாணவியரை பாராட்டி நீதிபதி பரிசு வழங்கி பேசியதாவது:
மாணவர்கள், பள்ளி, கல்லுாரி வாழ்க்கையை நல்ல முறையில் கொண்டாடுங்கள். படிப்பில் நல்ல கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் நல்ல நிலைமைக்கு வர யார் காரணமோ அவர்களை மறந்து விடக்கூடாது. ஏழை மாணவர்கள் படிப்பிற்காக உதவி செய்யுங்கள். தனி மனித வாழ்வில் ஒழுக்கம் மற்றும் நேரம் தவறாமை நேர்மையை கடைப்பிடியுங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர், பள்ளி செயலர் வித்யாசாகர், பள்ளி முதல்வர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
