தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரதமருக்கு லோக் மான்ய திலக் விருது

பிரதமருக்கு லோக் மான்ய திலக் விருது

பிரதமருக்கு லோக் மான்ய திலக் விருது


UPDATED : ஆக 01, 2023 12:00 AM

ADDED : ஆக 01, 2023 05:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2023 12:00 AM ADDED : ஆக 01, 2023 05:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
மஹாராஷ்டிராவில் நடந்த விழாவில், பிரதமர் மோடிக்கு, லோக் மான்ய திலக் விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நாடு முன்னேற்றப் படிக்கட்டுகளில் ஏற உதவிய ஆத்ம நிர்பார் கருத்துக்காகவும், தேசிய உணர்வை எழுப்பியதற்காகவும் பிரதமர் மோடிக்கு லோக்மான்ய திலக் விருது வழங்கப்படும் என திலக் நினைவு அறக்கட்டளை கூறியிருந்தது. இதன்படி புனேயில் நடந்த நிகழ்ச்சியில் மோடிக்கு லோக்மான்ய திலக் விருதை, அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர். இந்த விழாவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசியவாத காங்கிரசில் பிளவு ஏற்பட்ட பிறகும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணி அமைத்த பிறகு மோடியும் சரத்பவாரும் ஒரே மேடையில் அமர்ந்தது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வழிபாடுமுன்னதாக, மஹாராஷ்டிரா வந்த பிரதமர் மோடி, புனேயில் அமைந்துள்ள ஸ்ரீமந்த்க் தக்துஷேத் ஹல்வாய் கணபதி கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.அன்பளிப்புஇந்த பரிசு தொகையை நமாமி கங்கை திட்டத்திற்கு அளிப்பதாகவும், விருதினை 140 கோடி மக்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us