தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மலேஷியாவில் தமிழக சிறுதானியம் சாகுபடி

மலேஷியாவில் தமிழக சிறுதானியம் சாகுபடி

மலேஷியாவில் தமிழக சிறுதானியம் சாகுபடி


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலுார்:
தமிழகத்தில் விளையும் சிறுதானிய பயிர்களை, மலேஷியாவில் சாகுபடி செய்து, அந்நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கப் போகிறோம், என மலேஷியாவின் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுத்துறை இணையமைச்சர் சரஸ்வதி தெரிவித்தார்.தமிழகம் வந்துள்ள அமைச்சர் சரஸ்வதி, பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த மலேஷிய தொழிலதிபரான டத்தோ பிரகதீஷ்குமாரை நேற்ற சந்தித்தார்.பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மலேஷியா நாட்டின் இளைஞர்கள், விவசாயத்தில் ஈடுபட தயாராகவும், ஆர்வமாகவும் உள்ளனர். மலேஷியாவில், 60 சதவீத உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில், புதிதாக அமைந்துள்ள மலேஷிய அரசு, வேளாண் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. எங்கள் நாட்டின் தட்ப வெப்பநிலை, மண் வளம், விவசாயிகளின் தொழில் திறன் போன்றவற்றுக்கு ஏற்றவாறு சிறு தானிய உணவுப்பொருள் சாகுபடி செய்வது குறித்து வல்லுனர்களுடன் ஆலோசனை செய்ய உள்ளேன்.முதலில், தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, தொழில்நுட்பங்களை அறிந்து செல்வதற்காக வந்துள்ளேன். வேளாண்மை சார்ந்த வல்லுனர்கள் மற்றும் விவசாயிகள் மலேஷியாவுக்கு வரத் தயாராக உள்ளனர். அதற்காக அவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களை வைத்து, மலேஷியா இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் பயிற்சி அளிப்பது பற்றியும் பின் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us