UPDATED : ஆக 02, 2023 12:00 AM
ADDED : ஆக 02, 2023 10:18 AM
சென்னை:
சென்னை மாநகராட்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர்கள் வரும் 4ம் தேதி முதல் பொது கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள் அடிப்படையில், முன்னுரிமையின் இறுதி பட்டியல் மற்றும் காலி பணியிட பட்டியல் 16ம் தேதி வெளியிடப்படும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 17, 18 ஆகிய தேதிகளில், இடைநிலை ஆசிரியர்களுக்கு 21, 22 ஆகிய தேதிகளில் பொது கலந்தாய்வு நடைபெறும். முதுகலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1 மற்றும் 2, சிறப்பு ஆசிரியர்களுக்கு 23ம் தேதி நடைபெறும். தலைமை ஆசிரியர்களுக்கு வரும் 24ம் தேதி பொது கலந்தாய்வு நடைபெற உள்ளது என, மாநகராட்சி கல்வித்துறை துணை கமிஷனர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.
