தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழில்நுட்ப துறையில் அதிக முதலீடு வருவதற்கு வாய்ப்பு

தொழில்நுட்ப துறையில் அதிக முதலீடு வருவதற்கு வாய்ப்பு

தொழில்நுட்ப துறையில் அதிக முதலீடு வருவதற்கு வாய்ப்பு


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 04:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார்:
தமிழகத்தில் தொழில்நுட்ப துறையில் அதிக முதலீடுகள் வர வாய்ப்புள்ளது என தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா கூறினார்.வேலுார் மாவட்டம், அப்துல்லாபுரத்தில், தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை தொழில்துறை அமைச்சர் ராஜா நேற்று ஆய்வு செய்தார். பின், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை டெல் பகுதியில் அமைய உள்ள தொழிற்பூங்கா பகுதியை அமைச்சர் ராஜா மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகிய இருவரும் கூட்டாக ஆய்வு செய்தனர். அங்கு கூடியிருந்த மக்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், இந்த தொழிற்பேட்டையால், மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்; பல்வேறு நல்லவைகள் நடக்கும், என்றார்.பின், நிருபர்களிடம் அமைச்சர் ராஜா கூறியதாவது:
வேலுார் அப்துல்லாபபுரத்தில் தொழில்நுட்ப பூங்கா பணி துரிதமாக நடக்கிறது. இதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். காட்பாடி அருகே சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வு பணி தொடங்கி உள்ளது. இந்த தொழிற்பேட்டை சுற்றுச்சூழல் மாசு ஏற்படாதவாறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இதுவரை இந்தியாவில் நடைபெறாத வகையில் மிக பிரமாண்டமான முறையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும். இவை இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாநாடாக அமையும். இதில், முக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் தொழில்நுட்ப துறையில் அதிக அளவில் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us