தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா டூ கலைஞருக்கு மாறுகிறதா கல்வித்துறை

அண்ணா டூ கலைஞருக்கு மாறுகிறதா கல்வித்துறை

அண்ணா டூ கலைஞருக்கு மாறுகிறதா கல்வித்துறை


UPDATED : ஆக 02, 2023 12:00 AM

ADDED : ஆக 02, 2023 04:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2023 12:00 AM ADDED : ஆக 02, 2023 04:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழகத்தில் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டங்கள் இதுவரை சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கில் நடந்து வந்த நிலையில், முதல்முறையாக மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலக அரங்கில் இன்று (ஆக.,2) ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதையொட்டி அமைச்சர் மகேஷ், செயலாளர் காகர்லா உஷா, இயக்குனர் அறிவொளி உட்பட இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், 38 மாவட்ட கல்வி அதிகாரிகள் என ஒட்டுமொத்த கல்வித்துறையே மதுரையில் முகாமிடுகிறது. மேலும் நாளை (ஆக., 3) புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கற்றல் மையங்களின் தலைமையாசிரியர், தன்னார்வலர், ஆசிரியர் பயிற்றுனர் என 470 பேருக்கு விருது, பதக்கம் வழங்கும் விழாவும் அமைச்சர் தலைமையில் இந்நுாலகத்தில் நடக்கிறது. இதற்கிடையே கருணாநிதி பெயரில் உள்ள நுாலகத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக தேவையில்லாமல் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் மதுரைக்கு வரவழைத்து அலைக்கழிப்பதாக கருத்து எழுந்துள்ளது.இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: 
மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதற்கான வசதிகள் உள்ளன. அனைத்து கல்வி அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்பதால் அடுத்த நாள் விருது வழங்கும் நிகழ்ச்சியையும் சேர்த்து மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்நுாலகம் திறப்பு விழா நடந்தபோது அதில் பங்கேற்க அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அமைச்சர் மகேஷ் அழைப்பு விடுத்திருந்தார். முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக அன்று விழாவிற்கு வந்த அதிகாரிகள் யாரும் நுாலகத்திற்குள் சென்று பார்வையிட முடியவில்லை. இதனால் இதற்காகவும் மதுரை நுாலகத்தை அமைச்சர் தேர்வு செய்தார் ,என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us