தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி, ஜெம்பிளான்ஸ் ஹைட்ரோகார்பன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை ஐ.ஐ.டி, ஜெம்பிளான்ஸ் ஹைட்ரோகார்பன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை ஐ.ஐ.டி, ஜெம்பிளான்ஸ் ஹைட்ரோகார்பன்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம்


UPDATED : ஆக 03, 2023 12:00 AM

ADDED : ஆக 03, 2023 10:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2023 12:00 AM ADDED : ஆக 03, 2023 10:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐ.ஐ.டியில் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையின் டிஜிட்டல் ஸ்கில்ஸ் அகாடமி, ஜெம்ப்ளான்ஸ் ஹைட்ரோ கார்பன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து அப்ளைடு பெட்ரோலியம் இன்ஜினியரிங் மற்றும் ஹைட்ரஜன் எனர்ஜி (இ.ஜி.பி.இ.எச்) என்ற இணைய வழி முதுநிலை மேம்பட்ட சான்றிதழ் படிப்புத்திட்டத்தைத் தொடங்குகிறது. பெட்ரோலிய பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஹைட்ரஜன் எரிசக்தி ஆகிய துறைகளின் ஒருங்கிணைந்த நுட்பங்களைக் கொண்டதாக இந்த படிப்பு அமையும்.ஐ.ஐ.டி.எம் பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையுடன் இணைந்து ஐ.ஐ.டி.எம் ஆராய்ச்சி பூங்கா நிறுவனத்தின் பெட்ரோலிய பொறியியல் திட்ட பேராசிரியரும், ஜெம்பிளான்ஸ் ஹைட்ரோ கார்பன்ஸ் நிறுவனத்தின் முன்னணி ஆலோசகருமான பேராசிரியர் ராஜேஷ் நாயர் இந்தப் படிப்புக்கான திட்டத்தை வழிநடத்துகிறார். ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தெற்காசியா, அமெரிக்கா, தெற்காசியா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் வெளிநாட்டு சந்தைப்படுத்தலுக்காக எட்-பார்ஆல் நிறுவனத்துடன் ஜெம்பிளான்ஸ் ஹைட்ரோ கார்பன்ஸ் இணைந்து செயல்படுகிறது.சென்னை ஐ.ஐ.டியின் பேராசிரியர்கள், ஓ.என்.ஜி.சி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், கெயில் மற்றும் சென்னை பெட்ரொலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் தொழில் வல்லுநர்கள் இந்தப் படிப்பிற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள். இந்தப் படிப்பு குறித்த தகவல்களை என்ற info@zemblance.com மின்னஞ்சலிலோ அல்லது digitalskills.pravatak.org.in என்ற இணைய தள மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சென்னை ஐ.ஐ.டி பிரவர்தக் டெக்னாலஜிஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் சங்கர் ராமன் மற்றும் ஜெம்பிளான்ஸ் ஹைட்ரோகார்பன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக செயல் லட்சுமிபிரியா மேனன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us