தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., மெட்ராஸ் ல் எலக்ட்ரானிக் சிஸ்டம் படிப்பு அறிமுகம்

ஐ.ஐ.டி., மெட்ராஸ் ல் எலக்ட்ரானிக் சிஸ்டம் படிப்பு அறிமுகம்

ஐ.ஐ.டி., மெட்ராஸ் ல் எலக்ட்ரானிக் சிஸ்டம் படிப்பு அறிமுகம்


UPDATED : ஆக 03, 2023 12:00 AM

ADDED : ஆக 03, 2023 05:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 03, 2023 12:00 AM ADDED : ஆக 03, 2023 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
ஐஐடி மெட்ராஸ் பல்கலையில் பிஎஸ் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் எனும் 4 ஆண்டுகால இளங்கலை படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இப்பாடத்திட்டமானது வளர்ந்து வரும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் மாணவர்களை தயார் செய்யும் நோக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பில் சேர இம்மாதம் 27ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். study.iitm.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  இயற்பியல் மற்றும் கணிதத்துடன் 12 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதுவரை 1800 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 1200 விண்ணப்பங்கள் பிளஸ் 2 முடித்தவர்களும், 600 பேர் ஜேஇஇ  நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆவர். ஜேஇஇ எழுதி விண்ணப்பித்தவர்களுக்கு நேரடியாக அட்மிஷன் வழங்கப்படும்.ஐஐடி எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் பாபி ஜார்ஜ் பேசுகையில், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெர்ற வேண்டும் என்பது கட்டாயமில்லை. பல்கலையால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதே போதுமானது. இப்படிப்பு குறித்து நான்கு வார கால வகுப்பாக ஐஐடி மெட்ராஸ் ஆசிரியர்களால் கற்பிக்கப்படும், என்றார். ஆன்லைன் வாயிலாகவும் மாணவர்கள் இந்த படிப்பை கற்கலாம். ஆனால் தேர்வுகள், வினாடி வினா, செய்முறை ஆகிய வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடியாக வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பேராசிரியர் அனிருத்தன் பேசுகையில், வேகமாக வளரும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் மாணவர்களை தயார் படுத்தும் நோக்கத்தில் இப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இப்படிப்பை முறையாக கற்பதன் மூலம் மாணவர்கள் எலக்ட்ரானிக்ஸ் துறை பற்றிய அடிப்படை அறிவு, தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதுடன், எக்ஸ்பேர்ட்ஸ்களுடன் விவாதிக்கவும் வழிவகை செய்கிறது. பிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் படிப்பானது 3 முதல் 8 மாத குறுகிய கால படிப்பாகவும் படிக்கலாம். மேலும் மாணவர்கள் அடிப்படை நிலை சான்றிதழ், டிப்ளமோ அல்லது பிஎஸ் போன்ற பட்டங்களையும் பெற முடியும், என்றார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us