தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சீட் இல்லை

துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சீட் இல்லை

துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சீட் இல்லை


UPDATED : ஆக 04, 2023 12:00 AM

ADDED : ஆக 04, 2023 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2023 12:00 AM ADDED : ஆக 04, 2023 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு, ஏப்., 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டன. இதில் 91.39 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஜூன் 27 முதல் ஜூலை 4 வரை துணைத் தேர்வு நடந்தது. இதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பிளஸ் 1 படிக்க, தனியார் பள்ளிகளில் இடம் கிடைப்பது கடினம். இந்த நிலையில், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும் சேர்க்க முடியாது என, பள்ளி நிர்வாகம் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை எங்கள் பள்ளியில் சேர்த்தால், தேர்ச்சி விகிதம் குறையும், உயர் அதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டும் என, வாய்ப்பு அளிக்க மறுக்கின்றனர். இதனால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு முதல்வர் அல்லது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முறையான அறிக்கை அளிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.இது குறித்து நெற்குன்றத்தைச் சேர்ந்த நாகம்மாள், 34 என்பவர் கூறுகையில், நான் கூலி வேலை செய்து, என் மகனை படிக்க வைத்து வருகிறேன். 10ம் வகுப்பில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் என, இரு பாடப்பிரிவுகளில் அவர் தோல்வியடைந்தார். தற்போது, துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். ஆனால், பல பள்ளிகளில் அலைந்தும் அவனுக்கு சீட் கொடுக்க மறுத்தனர். தற்போது, சிபாரிசுடன் ஒரு பள்ளியில் சீட் கிடைத்துள்ளது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us