UPDATED : ஆக 04, 2023 12:00 AM
ADDED : ஆக 04, 2023 11:01 AM
ஷிவமொகா:
பள்ளி மதிய உணவில், அழுகிய காய்கறிகள் பயன்படுத்தியது தொடர்பாக, ஹொளலுார் கிராம அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.ஷிவமொகா ரூரல் ஹொளலுார் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், இரண்டு நாட்களுக்கு முன், மதிய உணவுக்கு அழுகிய காய்கறிகள் பயன்படுத்தினர். இந்த உணவை மாணவ - மாணவியருக்கு பரிமாறினர். இதையறிந்த கிராமத்தினர், பெற்றோர் பள்ளிக்கு சென்று, ஆசிரியர்களை கண்டித்தனர். அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகளிடம், &'பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வேண்டும்&' என, கிராமத்தினர் வலியுறுத்தினர். ஆவணங்களுடன் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதை தீவிரமாக கருதிய, கல்வித் துறை அதிகாரி நாகராஜ், தலைமை ஆசிரியைக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். மேலும், அவரை 10 நாட்கள் கட்டாய விடுப்பில் அனுப்பினார்.
